search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உள்துறை மந்திரி அமித் ஷா டிஸ்சார்ஜ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குணமடைந்ததையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த 18ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், மீண்டும் உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக அமித் ஷாவின் உடல்நலம் சீரடைந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே தன் பணிகளை கவனித்து வந்தார்.

    இந்நிலையில், அமித் ஷா பூரணமாக குணமடைந்ததைடுத்து, இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×