search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து நடைபெற்ற பகுதி
    X
    விபத்து நடைபெற்ற பகுதி

    மத்திய பிரதேசத்தில் சோகம் - சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி

    மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நர்மதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாநிலத்தின் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இதனை தொடர்ந்து வெள்ள நிலைமையை கண்காணிக்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹோசங்காபாத் மாவட்டத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டு வான்வழியே சென்று பார்வையிட்டார்.

    மத்திய பிரதேசத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஆபத்து அளவை மீறி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதுவரை தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 2 குழுக்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக 2 குழுக்கள் சென்று சேரும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கத்னி நகரில் வீடு ஒன்றின் சுவர் கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த குழந்தைகள் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது. இதில் 4 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.  அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன என கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு சந்தீப் மிஸ்ரா கூறியுள்ளார்.
    Next Story
    ×