என் மலர்

  செய்திகள்

  வெடிகுண்டு மிரட்டல்
  X
  வெடிகுண்டு மிரட்டல்

  பெங்களூரு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள சிட்டி ரெயில் நிலையம் மற்றும் அதன் எதிரே அமைந்து உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  பெங்களூரு:

  பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள சிட்டி ரெயில் நிலையம் மற்றும் அதன் எதிரே அமைந்து உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்றும், பிற ரெயில் நிலையங்களிலும் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், குருகேரளா. ராமேஸ்வர். ஸ்ரீபட என்ற பெயரில் செயல்படும் டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

  இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி உளவுத்துறை போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.

  இதையடுத்து உளவுத்துறை போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர். ஆனால் இந்த 2 ரெயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதனால் டுவிட்டர் பதிவிடப்பட்ட செய்தி வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.

  இருப்பினும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

  Next Story
  ×