search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை மந்திரி தலைமையிலான கூட்டம்
    X
    சுகாதாரத்துறை மந்திரி தலைமையிலான கூட்டம்

    கொரோனா: 0.29 சதவிகிதம் பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்

    இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 0.29 சதவிகிதம் பேர் செயற்கை சுவாசக்கருவியான வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தலைமையில் பல்வேறு துறை மந்திரிகள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை ஹர்ஷ்வர்தன் ’கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணைந்து செயல்படுவது திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 0.29 சதவிகிதத்தினர் மட்டுமே செயற்கை சுவாசக்கருவியான வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறனர். 

    1.93 சதவிகிதத்தினர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 2.88 சதவிகிதத்தினர் ஆக்சிஸன் கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 9 லட்சம் மாதிரிகள் (சாம்பில்கள்) பரிசோதனை செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

    மேலும், பாராளுமன்ற,சட்டமன்ற கூட்டத்தொடர்கள் கூடிய விரைவில் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடர்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் உத்தரவிட்டார்.
        
    இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள எம்பவர்டு குரூப் 1 தலைவர் விகே பால் கூறுகையில், ’பாரத் பயாடெக்கின் கொரோனா தடுப்பூசி மற்றும் சிங்டஸ் கடிலா தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது. சீரம் இன்ஸ்டிடியுட்டின் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி 3 ஆம் கட்ட பரிசோதனையில் உள்ளது’ என்றார்.  

    Next Story
    ×