என் மலர்

  செய்திகள்

  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர்
  X
  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர்

  புல்வாமா என்கவுண்டர்- பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் வீரமரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், ஸடூரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். 

  உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்கவுண்டர் நடந்த பகுதியைச் சுற்றி கூட்டுப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  Next Story
  ×