என் மலர்

  செய்திகள்

  உச்சநீதிமன்றம்
  X
  உச்சநீதிமன்றம்

  மொகரம் பண்டிகை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொகரம் பண்டிகையின்போது ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய அளவிலான பண்டிகை மற்றும் ஊர்வலத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

  அதனடிப்படையில் பெரும்பாலான மாநிலங்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதித்தன. சில மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

  இந்த மாதம் இறுதியில் மொகரம் பண்டிகை வருகிறது. அப்போது ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

  இந்த மனு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்ற பெஞ்ச் ‘‘பொதுவான உத்தரவு பிறப்பித்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் தொற்றை பரப்பியதாக ஒரு குறிப்பிட்ட சமூகம் டார்கெட் செய்யப்படும். ஏராளமான மக்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளது.
  Next Story
  ×