search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    41வது ஜிஎஸ்டி குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது

    41-வது ஜிஎஸ்டி குழு கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017, ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 41-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்ம்லா சீதாராமன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×