search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூக்களுக்காக தோட்டம் தோட்டமாக அலையும் கேரள மக்கள்
    X
    பூக்களுக்காக தோட்டம் தோட்டமாக அலையும் கேரள மக்கள்

    இறக்குமதிக்கு தடை: பூக்களுக்காக தோட்டம் தோட்டமாக அலையும் கேரள மக்கள்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து பூக்களை இறக்குமதி செய்ய கேரள அரசு தடைவிதித்துள்ளதால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
    கேரளாவில் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்று ஓணம். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். தற்போது கடந்த 22-ந்தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது. வருகிற 2-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

    ஓணம் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருது பூக்கோலம்தான். ஒவ்வொரு நாளும் விதவிமான கோலங்கள் போட்டு மக்கள் மகிழ்வார்கள்.

    தற்போது கொரோனா வைரஸ் காலம் என்பதால் வெளி மாநிலங்களில் இருந்து பூக்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளது. பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்தால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் கேரளாவில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பூக்களுக்கான மக்கள் தோட்டம் தோட்டமாக அலைந்து சேகரித்து பூக்கள் இட்டு வருகின்றனர். கோழிக்கோடு குட்டியாடி என்ற இடத்தை சேர்ந்த சிறுவர்கள் தோட்டத்தில் பூக்களை தேடிப்பிடித்து பறித்து வீட்டின் முன் சிறியதாக கோலமிட்டு மகிழ்ந்தனர்.

    ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும் அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்படும் சமயம்,

    மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.
    Next Story
    ×