search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
    X
    தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

    ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா?

    ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் குழந்தை உரிமைகளுக்கான உயரிய அமைப்பான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    கொரோனாவாலும், ஊரடங்காலும் குழந்தைகள் சந்தித்த சவால்களுக்கு தீர்வு காண எங்கள் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.

    ஊரடங்கு காலத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அப்படி அதிகரித்ததாக செய்திகள்தான் வெளியாகின.

    கொரோனா பிரச்சினையால் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் பள்ளிக்கூடமே திறக்காத நிலையில், அப்படி சொல்வது சரியல்ல.

    எத்தனையோ கடினமான தருணங்களில், குழந்தைகள் பள்ளிக்கு சென்று, தங்கள் தேசிய கடமையை ஆற்றி வருகிறார்கள். எனவே, அவர்களை பற்றி எதிர்மறையான அணுகுமுறை கொண்டிருப்பது நியாயமல்ல.

    ஊரடங்கையொட்டி, புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தபோது, குழந்தைகளுக்கு தங்கும் இடங்களை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தினோம். குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். ஆன்லைன் கல்வி, கல்வி கட்டணம் தொடர்பான பிரச்சினைகளையும் மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளோம். குழந்தைகள் கடத்தப்படுவதற்கு முக்கிய காரணம், வறுமை. எனவே, பெற்றோரின் வறுமையை ஒழிக்க அந்த குடும்பத்துக்கு மறுவாழ்வு அளிப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×