search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    இன்றைய தேவையை இவர் அன்றே கணித்தாரா?

    கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தினை 1962 ஆண்டிலேயே வால்டர் மொலினோ கணித்திருக்கிறார் என கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.


    இத்தாலி நாட்டை சேர்ந்த காமிக்ஸ் வரைபட கலைஞரான வால்டர் மொலினோ 1962 ஆண்டு வாக்கில் வரைந்த தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது போன்ற சித்திரம் சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி வருகிறது. 

    58 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட சித்திரம் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் பயன்படுத்த வேண்டிய ஒன்றாக நெட்டிசன்கள் பார்க்கின்றனர். அந்த வகையில், பழைய சித்திரத்தை பலர் தங்களின் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

    வைரலாகும் சித்திரத்தில், மக்கள் ஒருவர் பயன்படுத்தக்கூடிய வகையில் கண்ணாடியால் மூடப்பட்டு இருப்பதை போன்று காட்சியளிக்கும் வாகனங்களில் பயணிப்பது போன்று சித்திரம் வரையப்பட்டு உள்ளது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    2020 கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட வேண்டிய தனிநபர் போக்குவரத்து வாகனங்கள். வால்டர் மொலினோ எனும் கலைஞர் 1962 டிசம்பரில் வரைந்திருக்கிறார் எனும் தலைப்பில் வைரல் சித்திரம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த சித்திரம் 1962 ஆண்டில் வெளிவந்த லா டாமினிகா டெல் கொரியர் எனும் இத்தாலி நாட்டு நாளிதழில் அச்சிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது பெரும் நகரங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க வழி செய்ய எதிர்கால கற்பனையில் வரையப்பட்டது என தெரியவந்துள்ளது. 

    அந்த வகையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் வரையப்பட்ட சித்திரத்தை நெட்டிசன்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதாக கூறி பகிர்ந்து வருகின்றனர் என்பது தெளிவாகி விட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×