search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கிம் சுகாதாரத்துறை மந்திரி சர்மா
    X
    சிக்கிம் சுகாதாரத்துறை மந்திரி சர்மா

    சிக்கிம் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா

    சிக்கிம் சுகாதாரத்துறை மந்திரி எம்.கே. சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    காங்டாக்:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதல்மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல்வாதிகளும் இலக்காகி வருகின்றனர்.

    அந்த வரிசையில் சிக்கிம் மாநில சுகாதாரத்துறை மந்திரியும் இடம் பெற்றுள்ளார். சிக்கிம் சுகாதாரத்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் எம்.கே. சர்மா. இவர் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி எம்.கே. சர்மா நேற்று தெரிவித்தார். இந்த தகவலை சர்மா அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தான் தற்போது தன்னைத்தானே சுயதனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    சிக்கிமில் இதுவரை 1,336 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 834 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு சிக்கிமில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Next Story
    ×