search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ராவத்
    X
    தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ராவத்

    டாக்டர்கள் குறித்து சஞ்சய் ராவத் எம்.பி. சர்ச்சை கருத்து: தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு

    கொரோனா பரவல் பிரச்சினையில் டாக்டர்கள் குறித்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறிய சர்ச்சை கருத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
    மும்பை :

    சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, கொரோனா பரவலுக்கு உலக சுகாதார அமைப்பு தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும் டாக்டர்களை விட காம்பவுண்டருக்கு அதிகம் தெரியும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்துக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:-

    டாக்டர்கள் மீதான கருத்தை சஞ்சய் ராவத் எந்த மனநிலையில் சொன்னார் என்று தெரியவில்லை. கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் அவர் அவ்வாறு கூறியது சரியல்ல. நமது டாக்டர்கள் உண்மையாகவே கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் தங்களது வாழ்வை ஆபத்தில் வைத்து இரவு பகலாக பாடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சஞ்சய் ராவத்தின் கருத்து டாக்டர்களின் மனதை புண்படுத்தி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் சஞ்சய் ராவத் அளித்த விளக்கத்தில், மாநில மற்றும் இந்திய டாக்டர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு கூறவில்லை, என்றார்.

    Next Story
    ×