search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகவுடா
    X
    தேவகவுடா

    பெங்களூரு வன்முறை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தேவகவுடா

    பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறை குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஏ.பி.எம்.சி. மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த சட்ட திருத்தங்களுக்கும், அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாசனில் நடந்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். பெங்களூருவிலும் அந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் மனு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் வன்முறை குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதலால் வன்முறை நடந்திருப்பதாக சொல்லப்படுவதால், அதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டியது அவசியமானதாகும். வன்முறை தொடர்பாக ஏராளமானவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட கூடாது. இந்த விவகாரத்தில் அரசு முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×