search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
    X
    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

    மூணாறு நிலச்சரிவு: மீட்பு பணியின்போது மேலும் 2 உடல்கள் கண்டெடுப்பு

    இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 80 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.

    இதையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து வரும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.  

    இந்நிலையில், இன்று நடைபெற்றுவரும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் சின்னத்தாய் (62)  முத்துலெட்சுமி (22) என்ற இரண்டு பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    இதனால், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலச்சரிவு விபத்தில் இன்னும் 12 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×