search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகள்
    X
    விநாயகர் சிலைகள்

    கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும் - தானே மாவட்ட கலெக்டர் உத்தரவு

    கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும், சிலை கரைப்புக்காக மக்கள் வெளியே வரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நார்வேக்கர் உத்தரவிட்டு உள்ளார்.
    தானே:

    மராட்டியத்தில் வருகிற 22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு சில கட்டுப்பாடுகளுடன் மண்டல்களில் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி அளித்து உள்ளது.

    இந்த நிலையில் தானே மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நார்வேக்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தானே மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டிலேயே கரைத்து கொள்ள வேண்டும். சிலை கரைப்புக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகளில் சிலை கரைப்பு தினத்தில் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது” என்றார்.

    தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா இதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து வார்டு அலுவலகத்திற்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

    இதில் மக்கள் தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க விரும்புபவர்கள் மாநகராட்சி ஆன்லைனில் சிலையை கரைக்கும் இடம், நேரம் போன்றவை குறித்த விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 14-ந் தேதி (இன்று) முதல் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×