search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்ய கோபால் தாஸ்
    X
    நித்ய கோபால் தாஸ்

    ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ்க்கு கொரோனா: பூமி பூஜையில் கலந்து கொண்டவர்

    பூமி பூஜையில் கலந்து கொண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையின் தலைவர் கோபால் தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. ராம் மந்திர் என்ற அறக்கட்டளையின் தலைவராக நித்ய கோபால் தாஸ் உள்ளார். இவரும் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டவர்.

    தற்போது நித்ய கோபால் தாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். விழா முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரா மாவட்ட கலெக்டரிடம் பேசிய யோகி ஆதித்யநாத், மெதந்தா மருத்துவமனை டாக்டரை தொடர்பு கொண்டு. நித்ய கோபால் தாஸ் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்துள்ளார்.
    Next Story
    ×