search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழா ஒத்திகை
    X
    சுதந்திர தின விழா ஒத்திகை

    டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒத்திகை

    டெல்லி செங்கோட்டையில் நாளைமறுதினம் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், இன்று காலை அதற்கான ஒத்திகை நடைபெற்றது.
    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றுகிறார்கள்.

    கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளது.

    இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது.

    சுதந்திர தின விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் சட்டம்-ஒழுங்கு பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×