search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா: 942 பேர் பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 942 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டி 66,999 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை 23,96,638 பேர் பாதிக்கப்பட்டுள் நிலையில் 16,95,982 குணமடைந்துள்ளனர். 47,033 பேர் உயிரிழந்துள்ளனர்.  6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் குணமடைந்தோர் சதவிகிதம் 70.77 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதம் 27.27 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×