search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தடுப்பூசி போடுவதில் எந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை

    கொரோனா தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து தேசிய நிபுணர்கள் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேசமயம் இந்த வைரசை ஒழிப்பதற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் இந்திய விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரஷியாவில் தற்போது தயாராகி உள்ளது. உலகின் பல நாடுகளில் ரஷியாவிடமிருந்து தடுப்பூசியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.

    இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய நிபுணர் குழு நேற்று முதல் முறையாக ஆலோசனை நடத்தியது.

    நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரும் இணை தலைவராக இதில் பங்கேற்றார்.

    தடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச்செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து இந்த குழு விவாதித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்குவது, இந்த தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கொரோனா தடுப்பூசி மருந்து வாங்குவதற்கு தேவைப்படும் நிதி மற்றும் அவற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர். மேலும் மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனித்தனியான பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டாம் என்று இந்த குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
    Next Story
    ×