search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவில் இருந்து குணமடைந்த 107 வயது மூதாட்டி
    X
    கொரோனாவில் இருந்து குணமடைந்த 107 வயது மூதாட்டி

    கொரோனாவை வீழ்த்திய 107 வயது மூதாட்டி...

    மகாராஷ்டிராவில் 107 வயது நிரம்பிய மூதாட்டி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் மும்பை, புனே போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

    வைரஸ் அதிகமாக பரவி வந்தாலும் அதன் பாதிப்பில் இருந்து வயது வித்தியாசமின்றி பலரும் குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் 107 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் ஜல்ஹான் நகரை சேர்ந்த 107 வயது நிரம்பிய மூதாட்டிக்கு கடந்த 1-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அந்த மூதாட்டியின் குடும்பத்தில் ஏற்கனவே ஒரு பெண் வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், அந்த பெண்ணின் மூலமாகவே வைரஸ் தொற்று மூதாட்டிக்கு பரவியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூதாட்டியின் 2 மகன்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மூதாட்டி ஜல்ஹான் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக மூதாட்டியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 

    இதையடுத்து கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு மூதாட்டிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா ’நெகட்டிவ்’ என முடிவு வந்தது. இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்த 107 வயது நிரம்பிய அந்த மூதாட்டி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் மூதாட்டியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள்
    எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூதாட்டி மனதளவில் மிகவும் உறுதியானவர் என்றும் ஜல்ஹான் அரசு மருத்துவமனை டீன் ஜெய்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    கொரோனாவை வீழ்த்தி வெற்றிகொண்ட 107 வயது மூதாட்டிக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×