search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவக்குமார்
    X
    சிவக்குமார்

    பெங்களூரு வன்முறையில் 3 பேர் பலி, 50 போலீசார் காயம்: காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கடும் கண்டனம்

    நேற்றிரவு நடைபெற்ற வன்முறையில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50 போலீசார் காயம் அடைந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ. அகண்ட மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. எம்.எல்.ஏ.வின் உறவினரான நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்.எல்.ஏ.வின் வீடு மீது கற்களை வீசினர். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தீ வைக்கப்பட்டன.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எனினும், வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 50 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    குவிக்கப்பட்ட போலீசார்

    மேலும், இந்த சம்பவம் குறித்து டாக்டர் சிவகுமார் கூறுகையில் ‘‘நானும், காங்கிரஸ் கட்சியும் இந்த வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளதல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அமைதியை நிலைநாட்டுவது முக்கியமானது.

    எங்களது கட்சி எம்.எம்.ஏ.-க்கள் கூட்டத்தை 12 மணிக்கு கூட்ட அழைப்பு விடுத்துள்ளேன். சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் பேசியுள்ளேன். நாங்கள் அமைதி ஏற்பட முழு ஒத்துழைப்பு வழங்குவோம்’’ என்றார்.
    Next Story
    ×