search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவன்
    X
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவன்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவன்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்திய மாணவனின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
    பாகல்கோட்டை :

    பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா சித்தாப்புரா கிராமத்தை சேர்ந்தவன் ஹனுமந்தா(வயது 15). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். ஹனுமந்தா, சரியாக படிக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், ஆசிரியர்கள் உள்பட பலர், நீ எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற மாட்டாய் என்று கூறி வந்துள்ளனர்.

    பலரின் கேலி, கிண்டலுக்கு இடையே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஹனுமந்தா எழுதினான். இந்த நிலையில் நேற்று முன்தினம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை ஹனுமந்தா, தனது நண்பர்களுடன் செல்போனில் பார்த்தான். இதில், ஹனுமந்தா 625-க்கு 330 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருந்தான். இதனால் ஹனுமந்தாவுக்கு மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ஹனுமந்தா, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினான். அதாவது, “என்ன பார்த்தா தேர்வில் தேர்ச்சி பெறமாட்டாய் என்று சொன்னீங்க... நான் தேர்ச்சி அடைந்து விட்டேன்....” என கூறி கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து தரையில் போட்டு ஆக்ரோஷமாக கத்தினான். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
    Next Story
    ×