search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வப்னா
    X
    ஸ்வப்னா

    கேரள தங்கம் கடத்தல் வழக்கு - ஸ்வப்னாவை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

    கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரின் அமலாக்கத்துறை காவல் மேலும் நிடிக்கப்பட்டுள்ளது
    திருவனந்தபுரம் :

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

    இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது தீவிரவாத நிதி திட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ஸ்வப்னா சுரேஷ் சிறப்பு என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தங்கம் கடத்தலில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதால் ஜாமீன் வழங்க இயலாது என்று கோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா, சந்தீப்  இருவரையும் மேலும் 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  

    ரூ.100  கோடிக்கும் மேல் கருப்புப் பண மோசடி நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.   மேலும் கருப்புப் பணத்தை துபாய்க்கு பரிமாற்றம் செய்து தங்கமாக்கி இந்தியாவிற்கு கடத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.   

     தங்க கடத்தலில் பன்னாட்டு கும்பலுடன் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு தொடர்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×