search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    சுதந்திர தின உரையின்போது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை மோடி முன்வைப்பார் - ராஜ்நாத் சிங்

    பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின்போது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை முன்வைப்பார் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
    புதுடெல்லி:

    சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை முன்வைப்பார் என கூறினார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் “இந்தியாவின் சுயமரியாதை மற்றும் இறையாண்மைக்கு எந்த விலையையும் நமது அரசாங்கம் அனுமதிக்காது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கான மோடியின் முன் முயற்சியை செயல்படுத்த அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது சுதேசி இயக்கத்துக்கான மகாத்மா காந்தியின் உந்துதலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் முயற்சியாகும்.

    ராஜ்நாத் சிங்


    சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கோபுரங்களில் இருந்து தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை தேசத்தின் முன் முன்வைப்பார்” எனக் கூறினார். முன்னதாக சுயசார்பு திட்டத்தின்கீழ், பாதுகாப்புத்துறைக்கான 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய ராணுவ அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×