search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்தீப் சிங் பூரி
    X
    ஹர்தீப் சிங் பூரி

    உள்நாட்டு விமான சேவை: 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்- மத்திய மந்திரி தகவல்

    கொரோனா தடைக்குப்பின் தொடங்கப்பட்ட உள்நாட்டு விமான சேவையின் மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் மார்ச் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

    இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மே மாதம் 25-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப காலக்கட்டத்தில் பயணிகள் பெருமளவில் பயணம் செய்யவில்லை.

    அதன்பின் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. நேற்று மட்டும் 911 விமானங்களில் 93,062 பேர் பயணித்துள்ளனர்.

    மே 25-ந்தேதியில் இருந்து தற்போது வரை 56,792 விமான்ங்கள் மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×