search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்ச்சல் பரிசோதனை
    X
    காய்ச்சல் பரிசோதனை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேருக்கு கோரோனா: 861 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 861 பேர் உயிரிழந்துள்ளனர்.
    இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அது தற்போது 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை 21,53,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,80,885 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 6,28,747 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 43,379 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×