search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்

    இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    இதன்மூலம் இதுவரை நாட்டில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. சரியாக 14 லட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.

    இந்தியாவில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதம், 68.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நேற்றைய நிலவரப்படி நாட்டில் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை என்பது 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 ஆக உள்ளது.

    இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் கூறுகிறது.

    இதுவரையில் 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது. 
    Next Story
    ×