என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்9 Aug 2020 1:20 AM GMT (Updated: 9 Aug 2020 1:20 AM GMT)
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி:
உலகுக்கே சிம்மசொப்பனமாக கொரோனா வைரஸ் தொற்று அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும், உலகமெங்கும் இந்த வைரஸ் தொற்று புதிது புதிதாக பல்லாயிரக்கணக்கானோரை பாதித்து வருகிறது.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சரியாக 61 ஆயிரத்து 537 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இதன்மூலம் இந்தியாவில் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்து விடும்.
நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் (886) நேற்று இறப்பு எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்து 933 ஆகி உள்ளது. இவர்களில், அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தினர் 300 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது. கர்நாடகத்திலும் பலி எண்ணிக்கை சதத்தை கடந்தது (101).
அதே நேரத்தில் ஆந்திராவில் 89, உத்தரபிரதேசத்தில் 63, மேற்கு வங்காளத்தில் 52, டெல்லியில் 23, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் தலா 22, மத்திய பிரதேசத்தில் 16, உத்தரகாண்டிலும், தெலுங்கானாவிலும் தலா 14, ஜம்மு காஷ்மீரில் 13, ஒடிசாவில் 12, ராஜஸ்தான், சத்தீஷ்காரில் தலா 10 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
அரியானாவில் 9 பேர், ஜார்கண்டில், பீகாரில், அசாமில் தலா 6 பேர், கேரளா, புதுச்சேரியில் தலா 5 பேர், கோவாவில் 4 பேர், அந்தமான் நிகோபாரில் 3 பேர், நாகலாந்து மற்றும் திரிபுராவில் தலா ஒருவர் மரணம் அடைந்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு எண்ணிக்கையான 42 ஆயிரத்து 518-ல் பெரும்பான்மையானவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் (17 ஆயிரத்து 92) ஆவார்கள். இரண்டாம் இடத்தில் தொடரும் தமிழகத்தில் 4,690 பேர், டெல்லியில் 4,082 பேர் இறந்துள்ளனர்.
பிற மாநிலங்களில், கர்நாடகத்தில் 2,998, குஜராத்தில் 2,605, உத்தரபிரதேசத்தில் 1,981, மேற்கு வங்காளத்தில் 1,954, ஆந்திராவில் 1,842 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 962 பேரும், ராஜஸ்தானில் 767 பேரும், தெலுங்கானாவில் 615 பேரும், பஞ்சாப்பில் 539 பேரும், அரியானாவில் 467 பேரும், ஜம்மு காஷ்மீரில் 449 பேரும், பீகாரில் 369 பேரும், ஒடிசாவில் 247 பேரும், ஜார்கண்டில் 151 பேரும், அசாமில் 132 பேரும், உத்தரகாண்டில் 112 பேரும், கேரளாவில் 102 பேரும் கொரோனா வைரசுக்கு இரையாகி இருக்கிறார்கள்.
சத்தீஷ்காரில் 87 பேரும், புதுச்சேரியில் 75 பேரும், கோவாவில் 70 பேரும், திரிபுராவில் 37 பேரும், சண்டிகாரில் 23 பேரும், அந்தமான் நிகோபாரில் 19 பேரும், இமாசலபிரதேசத்தில் 14 பேரும், மணிப்பூரில் 10 பேரும், லடாக்கில் 9 பேரும், நாகாலாந்தில் 7 பேரும், மேகாலயாவில் 5 பேரும், அருணாசலபிரதேசத்தில் 3 பேரும், தத்ரா நகர் ஹவேலி, தாமன் தியுவில் 2 பேரும், சிக்கிமில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று, குணம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். குணம் அடைந்தோர் விகிதம் என்பது 68.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 29.64 சதவீதம் மட்டும்தான்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
இதற்கு மத்தியில் உலகளவில் 1 கோடியே 93 லட்சத்து 98 ஆயிரத்து 799 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 7 லட்சத்து 21 ஆயிரத்து 549 பேர் பலியாகி இருப்பதாகவும் நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
மோசமான நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா தொடர்கிறது. அங்கு 49 லட்சத்து 42 ஆயிரத்து 8 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. 1 லட்சத்து 61 ஆயிரத்து 358 பேர் கொரோனாவுக்கு அங்கு பலியாகி இருக்கிறார்கள்.
அமெரிக்காவுக்கு அடுத்து நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் தொடர்கிறது. அங்கு 29 லட்சத்து 62 ஆயிரத்து 442 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99 ஆயிரத்து 572 பேர் இறந்திருக்கிறார்கள்.

Next Story
×