search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடலை மீட்டு கொண்டு செல்லும் மீட்புப்படையினர்
    X
    உடலை மீட்டு கொண்டு செல்லும் மீட்புப்படையினர்

    இடுக்கி நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

    இடுக்கி மூணாறு தேயிலை தோட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 65-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்தனர். இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெறும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
    Next Story
    ×