search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி

    வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட நினைவு நாளை முன்னிட்டு, அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    மகாத்மா காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் டெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா என்ற பெயரில் தேசிய தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து தூய்மை இந்தியா அனுபவம் குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கூறும்போது ‘‘வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட நினைவு நாளை முன்னிட்டு, அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கிராமம் முதல் நகரம் வரை தூய்மை இந்தியா பற்றி பெரியவர்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தூய்மை இந்தியா வெற்றியில் மாணவர்களின் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

    இங்கு வந்திருக்கும் குழந்தைகள் உள்பட எல்லோரும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை பார்க்க பெருமையாக இருக்கிறது. இதன்மூலம்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

    மகாத்மா காந்தியின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற உலகம் முழுவதும் முன்வருகிறது. கடந்த ஆண்டு காந்திஜி-யின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டபோது, அது அதற்கு முன் எப்போதும் இல்லாதது. பல்வேறு நாடுகளின் பாடகர்கள் அவருக்கு பிடித்த பாடலான 'வைஷ்ணவ் ஜான் தோ' கற்றுக் கொண்டு பாடினர்.

    2014-க்கு முன்பு இதுபோன்று கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடியிருந்தால்? நினைத்து பாருங்கள். 60 சதவீதம் மக்கள் வெளிப்புற கழிப்பிடத்தை பயன்படுத்தும்போது நாம் லாக்டவுன் நடைமுறையை எடுத்திருக்க முடியாமா?. தூய்மை இந்தியா திட்டம் கொரோனாவுக்கு எதிராக போராட மிகப்பெரிய பலமாக இருந்தது.

    கடந்த சில ஆண்டுகளில், காந்திஜியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், 'ஸ்வச் பாரத் மிஷன்' அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியுள்ளனர். இதற்குக் காரணம் 60 கோடி மக்களுக்கு 60 மாதங்களில் கழிப்பிடம் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×