search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலைய ஓடுதள பாதை
    X
    விமான நிலைய ஓடுதள பாதை

    ‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்றால் என்ன?

    கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்துக்கு காரணம் அந்த விமான நிலையம் ‘டேபிள் டாப்’ விமான நிலையமாக இருப்பது தான் என்று கூறப்படுகிறது.
    கோழிக்கோடு:

    சாதாரணமாக விமான நிலையங்கள் சமதள நிலப்பரப்புகளில் அமைந்து இருக்கும். ஆனால் மலைக்குன்றுகள் அல்லது உயரமான இடங்களில் அமைக்கப்படும் விமான நிலையங்கள் ‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. மலையின்மேல்தான் கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ளது.

    பொதுவாக விமான நிலையத்தில் விமானங்கள் வேகமாக ஓடி வானில் பறப்பதற்கும், தரையிறங்கவும் நீளமான ஓடுதள பாதை தேவை. அதுபோன்று ஓடுபாதை 3,150 மீட்டர் நீளத்துக்கு குறைவாக இருந்தால் அந்த ஓடுபாதையில் விமானத்தை இறக்குவது மிகவும் கடினம். ஆனால் கோழிக்கோடு ‘டேபிள்டாப்‘ விமான நிலையத்தின் ஓடுபாதை 2,850 மீட்டர் தூரம்தான் உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குன்றின்மேல் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

    துபாயில் இருந்து கேரளா வாழ் மக்களை ஏற்றிக்கொண்டு கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய போது பலத்த மழை பெய்தது. அது ஓடுதளத்தில் இறங்கிய பின்னர் பாதை சரியாக தெரியாததால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடுதளபாதையின் முடிவில் உள்ள சுவரில் மோதியது.

    அதன்பின்னர் சமபகுதியாக இருந்திருந்தால் விமானம் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது. ஆனால் ஓடுதளத்தின் முடிவில் உள்ள சுவற்றில் மோதி அதன் முடிவில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் விமானத்தின் முன்பகுதி எடை தாங்காமல் அது இரண்டாக உடைந்து ஒரு பகுதி பள்ளத்தில் விழுந்துள்ளது.

    இதில் விமானத்தின் பின்பகுதியில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக காயம் ஏற்படவில்லை. ஆனால் முன்பக்க கதவு உள்ள பகுதியில் இருந்து விமானி அறை வரை உள்ள பகுதியில் இருந்தவர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது.

    விமானம் இந்த அளவிற்கு சேதம் அடைந்ததற்கு காரணம் அந்த விமானநிலையத்தின் ‘டேபிள் டாப்’ அமைப்பு தான் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×