search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்தீப் சிங் பூரி
    X
    ஹர்தீப் சிங் பூரி

    கேரள முதல்வர், ஆளுநர், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி கோழிக்கோடு விரைவு

    துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான நிலையில, மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சம்பவ இடத்திற்கு விரைகிறார்.
    வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.

    விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

    இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த உடனேயே கேரள முதல்வர் மீட்புப்பணிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவி்ட்டார். இதனால் இரவு 12 மணியளவில் அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் மற்றும் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கோழிக்கோடு விரைகிறார்கள்.

    ஹர்தீப் சிங் பூரி விபத்து குறித்து கூறுகையில் ‘‘இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். 127 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். விமானம் தீப்பிடித்து எரிந்திருந்தால் மிகவும் கஷ்டனமான நிலை உருவாகியிருக்கும். நான் கோழிக்கோடு விமான நிலையம் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×