search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி
    X
    பிரதமர் மோடி, ராகுல் காந்தி

    கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது: மோடி அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

    இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசை குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
    புதுடெல்லி :

    இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசை குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. மோடி அரசை காணவில்லை” என்று அவர் கூறி இருக்கிறார்.

    ராகுல் காந்தி கடந்த ஜூலை 17-ந் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போதைய வேகத்தில் கொரோனா பரவல் நீடித்தால் ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிடும் என்பதால், நோய்த் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். அந்த பதிவையும் நேற்றைய டுவிட்டர் பதிவுடன் அவர் இணைத்து உள்ளார்.
    Next Story
    ×