search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
    X
    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

    விமானம் விபத்துக்குள்ளான துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன் - ஜனாதிபதி

    கேரள விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 173 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிகிச்சை பெறுபவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில், கேரள விமான விபத்து தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’கேரளாவின் கோழிக்கோடில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன்.

    -இந்த விபத்து தொடர்பாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கானை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தேன். விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும், விமான ஊழியர்களுகும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.  

    Next Story
    ×