search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா விமான விபத்து
    X
    கேரளா விமான விபத்து

    கேரளா விமான விபத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர ஆலோசனை

    கேரள விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் இன்று வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.

    விமானத்தை தரையிறக்க முற்பட்டபோது அந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு விமானநிலைய ஓடுதளத்திற்கு அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

    இதில் விமானம் இரண்டு துண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள விமான விபத்து தொடர்பாக சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் (டிஜிசிஏ) பொது இயக்குனர், விமான போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள், இந்திய விமானை நிலைய அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா விமான அதிகாரிகள் இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையில், இந்த விமான விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×