search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா விமான விபத்து
    X
    கேரளா விமான விபத்து

    கேரளா ஏர் இந்தியா விமான விபத்தில் 15 பேர் பலி- உதவி எண்கள் அறிவிப்பு

    துபாய்- கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உதவிக்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.

    விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியது. ஆனால் ஓடுதளத்தையும் தாண்டி விமான நிற்காமல் சென்றது. இதனால் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

    தற்போது வரை விமானி உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. மீட்டுப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர்.


    கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 056 546 3903, 05430 90572, 0543090575 மற்றும் 0543090572 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கேரள விமான விபத்து தொடர்பான விவரங்களை அறிய உதவி எண்களை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.  1800 118 797,  11  23012113,  23014104,  23017905 இல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.   ஃபேக்ஸ்  11 23018158,  covid19@mea.gov.in மூலமும் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில் தற்போது இந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×