search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா அறிவிப்பு

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முழுமையாக வீடுகள் இடிந்து விழுந்திருந்தால் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முழுமையாக வீடுகள் இடிந்து விழுந்திருந்தால் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். வீடுகள் பாதி சேதம் அடைந்திருந்தால், சேதத்திற்கு ஏற்ப நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு, கிராமப்புறங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேலும் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கும்படியும் கூறியுள்ளேன். பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன். மேலும் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்கள் குறித்து தினமும் அறிக்கை வழங்கும்படியும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×