search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்மோகன் ரெட்டி
    X
    ஜெகன்மோகன் ரெட்டி

    ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ.

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்துள்ளார்.
    ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ. கோவில் கட்ட திட்டமிட்டு பூமி பூஜை மேற்கொண்டுள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோபாலபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. தலாரி வெங்கட்ராவ். அவர் கோபாலபுரம் மண்டலம் ராஜம்பாளையத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டுவதற்காக நேற்று அடிக்கல் நாட்டினார்.

    இதுகுறித்து எம்.எல்.ஏ வெங்கட்ராவ் கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரின் அயராத முயற்சிகளை என்றென்றும் மதிக்க கோவில் கட்டும் யோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், முதல்வர் ஜெகன்மோகன் நலத்திட்டங்களை வருங்கால தலைமறையினரும் நினைவு கூறும் விதமாக அவரை ஒரு கடவுளாக கருத வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கோயில் கட்டப்படுகிறது. மக்களின் அவல நிலையை அறிந்து கொள்ள நாட்டில் யாரும் செய்யாத வகையில் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதனையே நல திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர்.

    ஒய்.எஸ். குடும்பத்தினர் மக்களுக்கு சேவை செய்வதற்காக பிறந்துள்ளனர். இதற்காகதான் கடவுள் அந்த குடும்பத்தை பூமிக்கு அனுப்பியுள்ளார். எனவே எந்தவொரு தீய சக்திகளும் முதல்வர் ஜெகன்மோகனை நெருங்காமல் தடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு கோயில் கட்டுகிறேன்’’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×