search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி செய்தியால் பாதிப்பு
    X
    போலி செய்தியால் பாதிப்பு

    வைரலாகும் சப்வே சர்பர்ஸ் கதையின் சோக பின்னணி

    சப்வே சர்பர்ஸ் கேம் கதையின் பின்னணி என கூறும் சோக கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    கூகுள் பிளே ஸ்டோரில் அதிக டவுன்லோட்களை கடந்த கேம்களில் ஒன்றான சப்வே சர்பர்ஸ் கதைக்களம் உண்மையில் நிகழ்ந்த சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. 

    ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்த போது உயிரிழந்த சிறுவனக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கேம் உருவாக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. சப்வே சர்பர்ஸ் கேமினை உருவாக்கியவரின் மகன் உண்மையில் ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்து உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    சப்வே சர்பர்ஸ் கேம் கதைக்களமும் விளையாடுவோர் தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்து மாட்டிக் கொண்ட பின் போலீசிடம் இருந்து தப்பித்து ஓடுவது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தப்பித்து ஓடும் போது கடக்கும் தூரத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் இதர பொருட்களை சேகரிக்க முடியும்.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் தகவலை ஆய்வு செய்த போது, இந்த தகவலை முதலில் பதிவிட்ட அழிக்கப்பட்ட ட்விட் காணக்கிடைத்தது. ஜூலை 29 ஆம் தேதி இந்த ட்வீட் அழிக்கப்பட்டு இருக்கிறது. பின் ஜூலை 30 ஆம் தேதி உறுதி செய்யப்படாத தகவலை வழங்கியதற்கு இந்த பயனர் மன்னிப்பு கோரினார். 

    இந்த கேமினை இணைந்து உருவாக்கிய எஸ்வைபிஒ கேம்ஸ், சப்வே சர்பர்ஸ் தெரு கலாச்சாரம் மற்றும் அதன் தனித்துவத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளது.

    அந்த வகையில் வைரலாகும் தகவலில் உள்ளது போன்று இந்த கேம் உண்மையில் ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை என உறுதியாகி விட்டது.  

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×