search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா - ஜனாதிபதி நியமனம்

    ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு முதல் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு நியமணம் செய்யப்பட்டார்.
     
    குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான மர்மு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப்பின் காஷ்மீருக்கு மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட முதல் கவர்னர் ஆவார்.

    இதற்கிடையே, 9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் துணை நிலை கவர்னராக செயல்பட்டுவந்த கிரிஷ் மர்மு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்தார்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் கிரீஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, மனோஜ் சின்ஹாவை புதிய துணை நிலை கவர்னராக நியமனம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×