search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ராம ஜென்மபூமி, ஹனுமான் ஹார்கி சென்ற முதல் பிரதமர் மோடி

    அயோத்தி ராம ஜென்மபூமி மற்றும் ஹனுமான் ஹார்கி கோவில் சென்ற முதல் பிரதமர் மோடி என்று உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. 40 கிலோ வெள்ளி செங்கல் கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்ற பிரதமர் மோடியை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் ஹனுமான் ஹார்கி கோவில் சென்று வழிபாட்டார். அதன்பின் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் ‘‘ஹனுமான் ஹார்கி கோவிலுக்கு வந்த முதல் பிரதமர் மோடி. மேலும், ஸ்ரீ ராம ஜென்மபூமிக்கும் வந்த முதல் பிரதமர் இவர்தான்’’ என்று  உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், ‘‘மோடி நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதை குறிக்கும் கோவிலின் பிரமாண்டமான தொடக்க விழாவில் பங்கேற்ற முதல் பிரதமர்’’ என்று தெரிவித்துள்ளது.
    Next Story
    ×