search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா உயிரிழப்புகளின் தாக்கத்தை உணர 3 ஆண்டுகால மரண விவரங்களை வெளியிட கோரிக்கை

    கொரோனா உயிரிழப்புகளின் தாக்கத்தை புரிந்துகொள்ள கடந்த 3 ஆண்டுகால மரண விவரங்களை வெளியிடுமாறு அரசு அமைப்புகளுக்கு 200-க்கு மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், பொது சுகாதார நிபுணர்கள் என 200-க்கு மேற்பட்டோர், இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை ஆணையர், மாநில பதிவாளர்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் வெளியிட்டுள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கொரோனா மரணங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள சாதாரண காலங்களில் மரண விகிதம் எப்படி இருந்தது என்பதை அறிவது அவசியம்.

    எனவே, பிறப்பு, இறப்பை பதிவு செய்யும் மேற்கண்ட அமைப்புகள் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டும்.

    கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகால மரணங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும். அந்த மரணங்களுக்கான காரணங்கள் பற்றிய விவரங்கள் இருந்தால், அதையும் சேர்த்து வெளியிட வேண்டும். இறந்தவர்களின் வயது, பாலினம், இருப்பிடம், மரண தேதி போன்ற விவரங்களை வெளியிட வேண்டும்.

    இதன்மூலம், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை அரசுகள் உருவாக்க முடியும். எந்தெந்த இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம், பரிசோதனைகளை அதிகரிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.

    வேறு சில நாடுகளில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை இந்திய அரசு அமைப்புகளும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×