search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மேற்கு வங்களாத்தில் இன்று ஒரே நாளில் 2,752 பேருக்கு கொரோனா தொற்று

    மேற்கு வங்காளத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
    கொல்கத்தா:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 2,752  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,984 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 54  பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை  1,785 ஆக அதிகரித்துள்ளது.

    மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 2,066 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை  56,884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 22,315 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
    Next Story
    ×