search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோவில்
    X
    ராமர் கோவில்

    தீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி நகரம்

    ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு அகல் விளக்கேற்றி தீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி நகரம்.
    அயோத்தி:

    ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர். ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெற இருப்பதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ராமர் கோவில்


    இந்நிலையில் ராமர்கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்று அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும் உள்ள மக்கள் லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றினர். விலக்குகளில் இருந்து வெளிப்பட்ட தீப ஒளியில் அயோத்தி நகரம் முழுவதும் ஜொலித்தது. மேலும் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் தனது அலுவலக இல்லத்தில் தீப ஒளி ஏற்றினார். பின்னர் மத்தாபூ கொளுத்தியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தார். 
    Next Story
    ×