search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக செல்வம்
    X
    குக செல்வம்

    பாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்

    பாஜகவில் இணைவதற்காக டெல்லிக்கு வரவில்லை என்று ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக கூறப்பட்டது. மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் டெல்லி சென்ற கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் நட்டா வீட்டிற்கு சென்றார். கு.க.செல்வத்தை நட்டா வரவேற்றார். அங்கு சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டனர். இதையடுத்து நட்டா முன்னிலையில் கு.க.செல்வம் பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியானது.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம் கூறியதாவது:-

    தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். திமுகவில் உள்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். கட்சியின் தலைமையில் அதிருப்தி எதுவும் இல்லை. பாஜகவில் இணைவதற்காக டெல்லிக்கு வரவில்லை. தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன்.

    ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வாழ்த்து கூறினேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×