search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியா சக்ரபோர்த்தி
    X
    ரியா சக்ரபோர்த்தி

    ரியா சக்ரபோர்த்தியை விசாரிக்க பீகார் போலீசாருக்கு எந்த அதிகாரமும் இல்லை: வக்கீல் சொல்கிறார்

    ரியா சக்ரபோர்த்தியை விசாரிக்க பீகார் போலீசாருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற வற்புறுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார். பீகார் போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மும்பையில் உள்ள ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்த பீகார் போலீசார் மகாராஷ்டிரா சென்றுள்ளனர். 
    இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தியின் வக்கீல் கூறுகையில் ‘‘ரியா சக்ரபோர்த்தியின் வாக்குமூலம் மும்பை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் போலீசார் நடவடிக்கைக்கு ஒத்துழைத்துள்ளார். பீகார் போலீசாரிடம் இருந்து இதுவரை எந்தவித நோட்டீசும், சம்மனும் அவர் பெறவில்லை. அவர்கள் விசாரணை நடத்த எந்த அதிகாரமும் இல்லை’’ என்றார்.

    மும்பை சென்ற பீகார் போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×