search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காபி
    X
    காபி

    கொச்சி விமான நிலையத்தில் மோடி தலையீட்டால் டீ, காபி விலை குறைந்தது

    பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.
    கொச்சி:

    கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ஷாஜி என்பவர் அண்மையில் இந்த விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தார். அதனைத் தொடர்ந்து டீயின் விலை ரூ.100 என கடைக்காரர் கூறியதும் ஷாஜி அதைக்கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

    அதனைத் தொடர்ந்து ஷாஜி தனது புகாரை பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலம் அனுப்பினார். அந்தப் புகாரின் அடிப்படையில் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க பிரதமர் முன்வந்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.100 க்கு விற்கப்பட்டு வந்த டீ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் காபி ரூ. 20-க்கும், பருப்பு வடை, மெதுவடை உள்ளிட்டவை ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×