search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    நடுவானில் ஜெட் விமானங்கள் செய்த காரியம் - வைரலாகும் அசத்தல் வீடியோ

    நடுவானில் ஜெட் விமானங்கள் செய்த காரியம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     
    பிரான்சில் இருந்து ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவில் உள்ள அம்பாலா விமான தளத்தில் ஜூலை 29 ஆம் தேதி களமிறங்கின. ஜூலை 27 ஆம் தேதி பிரான்சில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் 7 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து இந்தியா வந்தடைந்தன. இடையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒருமுறை தரையிறக்கப்பட்டன. 

    இந்நிலைில், நடுவானில் பறக்கும் போது ஜெட் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியா வரும் வழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் ரஃபேல் ஜெட்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது எனும் தலைப்பில் வீடியோ வைரலாகி வருகிறது.

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் வீடியோவில் இருப்பது பிரேசில் விமானப்படையை சேர்ந்த ஏர் ஃபோர்ஸ் எஃப்-5 ரக போர் விமானம் ஆகும். இதனை பிரேசில் கடற்படையின் ஏ-4 போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்புகிறது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இதே வீடியோ அடங்கிய ட்விட்களை 2018, செப்டம்பரில் பிரேசில் விமான படை பதிவிட்டு இருக்கிறது. பிரேசில் கடற்படையின் எஃப்5 போர் விமானம், ஏ-4 போர் விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்புகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோவில் இருப்பது இந்தியா சமீபத்தில் வாங்கிய ரஃபேல் ஜெட் விமானங்கள் இல்லை என தெளிவாகி விட்டது. 

    முன்னதாக இந்தியா வந்த ரஃபேல் ஜெட் விமானங்களுக்கும் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. ரஃபேல் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்படும் வீடியோவினை இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×