search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லட்சுமண் சவதி
    X
    லட்சுமண் சவதி

    அடுத்த 3 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக எடியூரப்பா நீடிப்பார்: லட்சுமண் சவதி

    எடியூரப்பா எங்கள் அனைவருக்கும் தலைவர். அடுத்த 3 ஆண்டுகளுக்கும் எடியூரப்பாவே முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு தற்போது துணை முதல்-மந்திரியாக பணியாற்றி வரும் லட்சுமண் சவதியை நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த தகவலை லட்சுமண் சவதி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எடியூரப்பா எங்கள் அனைவருக்கும் தலைவர். அடுத்த 3 ஆண்டுகளுக்கும் எடியூரப்பாவே முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன். அரசின் தலைமை மாற்றம் குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்களுடன் நான் விவாதிக்கவில்லை. எங்கள் கட்சியின் அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகள் பதவி காலம் உள்ளது. அந்த பதவி காலத்தை எடியூரப்பா நிறைவு செய்வார். மத்திய மந்திரிகளை சந்திக்கவே நான் டெல்லி வந்தேன். பிரகாஷ் ஜவடேகர், நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து எனது துறை தொடர்பாக கோரிக்கை கடிதம் கொடுத்தேன்.

    இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

    பா.ஜனதாவை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், “முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுகிறார் என்ற தகவல் தவறானது. கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரியை மாற்ற வாய்ப்பு இல்லை நான் கருதுகிறேன். ஆனால் எடியூரப்பாவுக்கு அடுத்து பலமான தலைவராக யாரை உருவாக்குவது என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது“ என்றார்.

    வட கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், எடியூரப்பாவுக்கு பிறகு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை முன்னிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். மந்திரிசபை விரிவாக்கத்தின்போது சில மந்திரிகளின் பதவி பறிபோகும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு பயத்தில் உள்ள மந்திரிகள் டெல்லி சென்று தங்களின் பதவியை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×