என் மலர்

  செய்திகள்

  திருப்பதியில் வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு
  X
  திருப்பதியில் வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

  கொரோனா தொற்று அதிகரிப்பு: திருப்பதியில் வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே வாகனங்கள் இயங்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில வாகனங்கள் நகருக்குள் வர அனுமதியில்லை.
  திருப்பதி :

  திருப்பதி நகரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பதி நகரில் வாகனங்கள் இயங்கவும், கடைகள் செயல்படவும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 5-ந் தேதிவரை காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே இரு சக்கரவாகனங்கள், ஆட்டோக்கள், கார் போன்ற வாகனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 11 மணிக்கு பிறகு வாகனங்கள் இயங்க அனுமதி கிடையாது.

  அதேபோன்று பால் மற்றும் மருந்துக்கடை தவிர மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு உரிய அனுமதியுடன் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

  வெளிமாநில வாகனங்கள் திருப்பதி நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நகரின் எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த தகவலை திருப்பதி நகர துணைபோலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூனா தெரிவித்தார்.
  Next Story
  ×